ஓலா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..
இந்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல நிறுவனமாக ஓலா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ்அகர்வால் அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஓலா எலெக்ட்ரிக் பொருட்களை விற்கலாம் என்பதே அந்த அறிவிப்பு. ஓஎன்டிசி நெட்வொர்க்கில் ஓலா நிறுவனத்தின் பொருட்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதும், அடுத்த வாரம் முதல் ஓலா எலெக்ட்ரிக் நிறுவன பொருட்கள் கிடைக்கும் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது ஓலா நிறுவனத்துக்கு என 800 கடைகள் உள்ளன. பிரத்யேகமான டீலர்ஷிப் அளிப்பதை விட, இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஓலா ஸ்கூட்டர்களை விற்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். அண்மையில் அந்நிறுவனம் பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவன வருவாய் பெரிய அளவில் அதிகரிர்தது. அதே நேரம் நிறுவனத்தின் நஷ்டம் என்பது 267 கோடியில் இருந்து தற்போது 347 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அண்மையில் 3 மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தியது. மேலும் 2 பைக்குகள் சந்தைப்படுத்தப்பட இருக்கிறது. ஓலா ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் புரோ ஆகிய மூன்று வகை பைக்குள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் ஆரம்ப விலை 74ஆயிரத்து 999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது