ஒரு பக்கம் சம்பள உயர்வு…. மறுபக்கம் ஆட்குறைப்பு!!!!
மெரிட் சேலரி இன்கிரீஸ் என்ற வகையில் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ்
மற்றும் விப்ரோ தங்கள் ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அளித்துள்ளது.
ஊழியர்களை தக்க வைக்கவும்,மாறி வரும் போட்டி சூழலை சமாளிக்கவும் 10% சம்பள உயர்வை
இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இது தொடர்பாக
காக்னிசண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்
அசோசியேட் டைரக்டர் பதவி வரை உள்ள ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்துடன் ஊதிய உயர்வு சேர்ந்து
கிடைக்க இருக்கிறது.
ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து
நாடுகளிலும் காக்னிசண்ட் ஊதிய உயர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை முடிவடைந்த காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் அட்ரிஷன் ரேட் எணப்படும்
பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 31 விழுக்காடாக உள்ளது
டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளியை ஒட்டி ஏற்கனவே சம்பள
உயர்வு அளித்துள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது காக்னிசண்ட் அறிவிப்பும் ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.