ஓடிபிகள் நிற்கப்போகிறதா??
வரும் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில சேவைகளுக்கான ஓடிபிகள் நிற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட இருக்கின்றனர். அது என்ன பிரச்சனை பார்க்கலாம் வாங்க.. டெலிகாம் துறையில் முன்னோடியாக உள்ள ஏர்டெல், வோடஃபோன், ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விதிகள் அதாவது எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் வகையிலான புதிய விதிகளை அமல்படுத்த டிராய் பலமுறை அவகாசம் அளித்தது. ஆனால் அதில் இந்த நிறுவனங்கள் புதிய விதிகளை பின்பற்றவில்லை. இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி இந்த புதிய விதிகளை பின்பற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு இறுதி கால அவகாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியான ஓடிபிகள், மோசடி நபர்கள்களை தடுக்கும் வகையில் புதிய விதிகளை டிராய் செயல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் டெலிகாம் நிறுவனங்கள் கையில் எடுக்க தயங்கி வருகின்றன. குறிப்பாக வணிக ரீதியிலான ஓடிபிகள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என ஆராய்வதற்காக டிராய் முயற்சித்து வருகிறது. மிகமுக்கியமாக வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன. ஆனால் புதிய விதிகளுக்கு டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க தயங்கி வருகின்றன. இந்த நிலையில் வரும் 1 ஆம் தேதிக்குள் புதிய விதிகளுக்கு உட்படாத டெலிகாம் நிறுவனங்களுக்கு ஓடிபி செல்லாத வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சிலவாடிக்கையாளர்களுக்கு ஓடிபியே வராமல் போகவும் வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் மின்வணிகம்,வங்கி மற்றும் சமூக வலைதள நிறுவனங்களை பயன்படுத்தாமல் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் தரப்பு பணிகளை செய்து வந்தாலும், கூடுதல் பாதுகாப்புக்காக 2எப்ஏ எனப்படும் இரண்டு முறை சரிபார்க்கும் வசதியை மக்கள் தங்கள் கணக்குகளுக்கு பயன்படுத்தவும் பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உங்களுக்கு தொடர்பு இல்லாத லிங்குகளை தொடவேண்டாம் என்றும், தெரியாத ஆப்களை பதிவிறக்கம் செய்யவேண்டாம் என்றும் மக்களை பாதுகாப்பு நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வலுவான பாஸ்வேர்டுகள், தொடர்ந்து பாதுகாப்பு அப்டேட்களை பெறுதுல் மற்றும் பாதுகாப்பு செயலிகளை செல்போன்களில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் பாதுகாப்பு நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.