எங்க பொருள் உடம்புக்கு நல்லதில்ல… திருப்பி கொடுத்துடுங்க!!!
உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பென்சீன், என்ற வேதிப்பொருள் உள்ளதால் டவ்,நெக்சஸ்,டிரஸ்ஸமே உள்ளிட்ட நிறுவன
பொருட்கள் திரும்பப்பெறப்படும் என்ற அமெரிக்க அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பிட்ட இந்த வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருளாக உள்ளதால் இதனை பயன்படுத்தி வந்தோர்
பீதியடைந்துள்ளனர்
திரும்பப்பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட டவ் உள்ளிட்ட பொருட்கள் இன்னமும் மின் வணிக நிறுவன இணையதளங்களில்
கிடைப்பது மேலும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
பிளிப்கார்ட்,அமேசான்,மிந்த்ரா உள்ளிட்ட இணையதளங்களில் இன்னமும் இந்த பொருட்களை பொதுமக்கள் ஆர்டர்
செய்ய முடிகிறது.
குறிப்பிட்ட இந்த ஷேம்புகள் அமெரிக்கா மற்றும் கனாடாவில் மட்டுமே கிடைத்ததாகவும்,இந்திய மக்கள் அச்சம் கொள்ளத்
தேவையில்லை என்றும் டவ் ஷாம்புவை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிரை ஷாம்புக்களில் மட்டுமே இந்த ரசாயணம் இருந்ததாகவும், இவை அக்டோபர் 2021க்கு முன்பு இருந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.
டிரை ஷாம்புக்கள் சருமத்தில் படிந்து அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்துகின்றன.
பென்சின் அதிகம் உள்ள பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் எவ்வளவு பென்சீன் அழகு சாதன
பொருட்களில் வைக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை..
அமெரிக்காவில் டவ், நெக்சஸ், டிரெஸ்ஸமே உள்ளிட்ட பொருட்கள் திரம்பப்பெறப்பட்டுள்ளன.
இதேபோல் பிஅண்ட் ஜி நிறுவனத்தில் பேன்டீன்,ஓல்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட நிறுவனப் பொருட்களை அந்த நிறுவனமே தானாக
முன்வந்து திரும்பப் பெற்றுள்ளன. டிரை ஷாம்புகள் மட்டுமே பிரச்னைக்கு உரியது என்று நிறுவனங்கள் கூறினாலும்
பென்சீன் குறித்த அச்சம் பொதுமக்களை ஆட்டிப்படைக்கிறது.