வெயிட்டா உஷார் செய்த பாகிஸ்தான்!!!
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிதி சூழல் , மற்றும் கடன் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் சீனாவும், சவுதி அரேபியாவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன அந்நாட்டில் மோசமான நிதி சூழல் மற்றும் அண்மையில் கொட்டிய பெருமழை காரணமாக பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த சூழலில் அண்மையில் புதிய பிரதமர் செபாஷ் செரீப் பெய்ஜிங் சென்றிருந்தார். அப்போது, உங்களை கடினமான சூழலில் இருந்து நாங்கள் மீட்கிறோம்,அப்படியே விட்டுவிடமாட்டோம் என்று சீன அரசு தரப்பில் கூறப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது. இதன்படி 9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை சீனாவும், 4 பில்லியன் அமெரிக்க டாலரை சவுதி அரேபியாவும் அளிக்க உள்ளது. மேலும் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து பெஷாவர் நகரம் வரை அதிவேக ரயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதை தொடர்ந்து பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் நிதி கையிருப்பு 8.91 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சீனாவும், சவுதி அரேபியாவும் அளிக்கும் நிதி, கடனாகவே அளிக்கப்படுவதாகவும், விரைவில் பொருளாதார சிக்கலை இது அதிகரிக்கும் என்றும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.