PAN 2.0 அப்படி என்றால் என்ன..
இந்தியாவில் வரி செலுத்துவோரின் வசதிக்காக 2.0 என்ற புதிய பேன்கார்டு முறையை இந்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. 1435 கோடி ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. PAN 2.0 அம்சத்தில் ஏற்கனவே உள்ள PAN,டேன் மற்றும் டின் ஆகியவை ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும். துல்லியம், வேகம் மற்றும் கச்சிதம் ஆகியவை இந்த புதிய PAN 2.0 திட்டத்தி்ன் நோக்கமாக கூறப்படுகிறது. இதில் முடிந்த வரை காகிதமில்லாத பரிவர்த்தனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் அதிநவீன சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. புதிய பேன் முறையால் வரி செலுத்துவோருக்கு தகவல்கள், அப்டேட்கள் காத்திருக்காமல் உடனே கிடைக்கும். வரி செலுத்தும்போது பிழைகள் நிக்கப்படும், அதே நேரம் பேன் என் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் விவரங்களை கட்டணமில்லாமல் அப்டேட் செய்துகொள்ள இயலும். வரி செலுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை பேன் 2.0 பாதுகாக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. புதிய பேன் எண் வாங்கவேண்டுமா என்றால் அவசியமில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் தேவைப்பட்டால் 2.0 திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம், புதிய கார்டில் கியூ ஆர் கோடு வசதியும் உள்ளது.