வெகு தொலைவில் இல்லை என்கிறார் பாவல்..

உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தனித்துவம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திகழ்கிறது. இதன் தலைவராக ஜெரோம் பாவல் திகழ்கிறார். இவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அளவுக்க சக்தி கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ், அடுத்தடுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைமேல் பலன் அளித்த நிலையில் அமெரிக்க பணவீக்கம் என்பது மெல்ல படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இதனை கவனித்து வந்த பாவல் பணவீக்கம் கட்டுப்படுவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். இது பல நாட்டு பங்குச்சந்தைகளை பதம் பார்த்தது. இதன் ஒரு பகுதியாக இதுவரை இல்லாத உச்சத்தில் தங்கம் விலை விற்கப்படடு வருகிறது. இந்த சூழலில் 2 விழுக்காடு என்ற இலக்கை நோக்கி அமெரிக்க பணவீக்கம் இருப்பதால் ஏற்கனவே கூறியபடி கடன்கள் மீதான வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கும் திட்டம் வெகு தூரத்தில் இல்லை என்று பாவல் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் செனட் வங்கி குழு கூட்டத்தில் பேசிய ஜெரோம் பாவல்,நாடு பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டுமெனில் மீண்டும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தவறில்லை என்றும் பேசியிருக்கிறார்.