பணத்தைக் கொடுத்துட்டு வண்டியை எடு!!!!
ஒரு காலகட்டத்தில் வணிகத்தில் கொடிகட்டி பறந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது.நிதி நெருக்கடியால் அதன் பணியாளர்களுக்கும் கூட சம்பளம் தருவதில் நிலுவைத் தொகை உள்ளது.இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜலன்-கல்ராக் கண்சார்டியம் அமைப்பு2 நிபந்தனைகளை முன்வைத்தது.ஒன்று நவம்பர் 11ம் தேதிக்குள் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையாக உள்ள 52 கோடி ரூபாய் பணம் தரவேண்டும்.இரண்டாவதாக கடன் கொடுத்தவர்களுக்கு 185 கோடி ரூபாயை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தர வேண்டும் ..இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜெட் ஏர்வேஸ் இதுவரை நிறைவேற்றவில்லை என்கிறது வட்டாரங்கள்.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பணபலன்களைஉடனே தரவும் பல்வேறு நிதி அமைப்புகள் அழுத்தம் தருகின்றன. ஆனால் அதையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அளித்ததாக தெரியவில்லை.நிதி சூழலை சரி செய்ய முடியாமல் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் பறக்க வைக்க எடுத்து வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.