பேடிஎமில் சம்பளம் குறைப்பு..
பிரபல நிதிநுட்ப நிறுவனமான பேடிஎம் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைத்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்குத்தான் அதிக சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை அந்நிறுவனம் கடந்த 21 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. பணியாளர்கள் அல்லாத நிர்வாகிகளுக்கு ஆண்டு சம்பளம் 48லட்சம் ரூபாய்க்கு மேல் தரப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. புதன்கிழமை பங்குவர்த்தகம் முடியும் நேரத்தில் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 573 ரூபாயாக இருந்தது. அதற்கு முன் தினம் 572.75 ரூபாயாக இருந்தது. ராஜிவ் கிருஷ்ண முரளிலால் அகர்வாலை சுதந்திரமான இயக்குநராக நியமிக்க பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
ரவிச்சந்திர அடுசுமல்லியையும் இயக்குநராக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுதந்திரமான இயக்குநர்களுக்கு சம்பளமாக ஆஷித் ரஞ்சித்துக்கு 1.65 கோடி ரூபாயும், கோபாலசுந்தரம் ஸ்ரீனிவாசராகவன் சுந்தரராஜனுக்கு 2.07 கோடி ரூபாயும் ஆண்டு சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குறைக்கப்பட்ட சம்பளம் மற்றும் இயக்குநர்கள் சம்பளம் குறித்து நிர்வாகம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.