உச்சமும் லட்சமும்..
செப்டம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து 85,169 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி63 புள்ளிகள் உயர்ந்து 26,004புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. வணிகத்தின்போது இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 85,247 புள்ளிகளும், நிஃப்டி 26,032 புள்ளிகள் என்ற உச்சத்தையும் தொட்டன. Power Grid Corp, NTPC, Axis Bank, Grasim Industries, Bajaj Finserv ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன. இதேபோல் LTIMindtree, Tech Mahindra, Tata Consumer, Tata Motors ,Titan Company ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகம், ஆற்றல், ரியல் எஸ்டேட்,ஊடகத் துறை பங்குகள் 0.5 முதல் 3 விழுக்காடு வரை உயர்ந்த நிலையில்பொதுத்துறை வங்கிகள், எஃப்எம்சிஜி வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. செப்டம்பர் 25ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 56ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 60 ரூபாய் உயர்ந்த தங்கம் 7 ஆயிரத்து 60 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 3 ரூபாய் உயர்ந்து 101 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.