அமேசான் ரீடெயிலருக்கு அபராதம்..
வாடிக்கையாளர் ஒருவருக்கு பழுதான லேப்டாபை வழங்கிய புகாரில் அமேசான் ரீடெயிலருக்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் 45ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு நபர் ஒருவர் அமேசானில் லேப்டாப் வாங்கியுள்ளார். அது பழுதானதால் அதனை எடுத்துச்செல்லும்படி அந்த நபர் அமேசானுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் எடுத்துச்செல்லப்பட்ட லேப்டாப் நிறுவனத்துக்கு சேர்ந்ததா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியவில்லை என்று வாடிக்கையாளர் புகார் அளித்தார். இது தொடர்பாக 18 மாதங்களாக அலைக்கழிப்பதாக புகார் எழுந்த நிலையில் டெல்லி கிழக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் மல்ஹோத்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை அளித்துள்ளனர். வாடிக்கையாளர் அளித்த அனைத்து ஆவணங்களையும் படித்துப்பார்த்த நீதிபதி அமேசான் நிறுவனமும் அவருக்கு ஏஜெண்டாக செயல்பட்ட அபாரியோ என்ற நிறுவனத்தையும் நீதிபதிகள் கடுமையாக சாடினர். இது போன்ற சிக்கல்களை தீர்க்க போதுமான வழிமுறைகளை ஏற்படுத்தவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க போதுமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று குறிப்பிட்ட அமைப்பு அபராதம் விதித்துள்ளது. உண்மையில் நல்ல விஷயம் தான்.