மினிமம் பேலன்ஸ் இல்லாததால் 8500 கோடி ரூபாய் அபராதம்..
பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் 8500கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரை மட்டும் 12 பொதுத்துறை வங்கிகளில் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குத்தான் மத்திய அரசு இந்த அபராத விகிதத்தை பதிலாக அளித்துள்ளனர். வங்கிகளில் கணக்கு கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. பரோடா வங்கி மெட்ரோவில் 125 ரூபாயை வசூலிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியில் 2020 முதல் மினிமம் பேலன்ஸ் இல்லை எனில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் நீக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது ஏழை மக்களின் பாக்கெட்டுகளை சுரண்டும் செயல் என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 16லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெருநிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்த மத்திய அரசு,8500 கோடி ரூபாயை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் பணத்தை மேலும் வசூலிப்பது மோடி அரசின் சக்ரவீயூகம் என்று கூறினார்.