பெப்சி, கொக்க கோலாவுக்கு தலைவலி தரும் ரிலையன்ஸ்..
இந்தியாவில் 70-80களில் பிரபலமாக இருந்த குளிர்பானமாக கேம்பா இருந்தது. நாளடைவில் அந்த வணிகம் நின்ற நிலையில், அதனை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் அதனை சந்தை படுத்தி வருகிறது. மற்ற குளிர்பானங்களைவிட விலை குறைவாகவும், ருசி அதிகமாகவும் உள்ளதால் கேம்பாவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெப்சி, கொக்க கோலா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை படுத்துவிட்டது. இந்த நிலையில் கேம்பாவுக்கு போட்டியாக விலை குறைந்த குளிர்பானங்களை சந்தை படுத்த பெப்சி, கொக்க கோலா நிறுனங்கள் பணிகளை செய்து வருகின்றனர். 10 ரூபாய்க்கு கோக் பாட்டில்கள் அளிக்கும் வகையில் கொக்க கோலா நிறு வனமும் இரண்டாம் நிலை நகரங்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. சென்னையைச் சேர்ந்த பொவன்டோ, ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெயந்தி கோலா, உள்ளிட்ட நிறுவன பொருட்களும் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக கொக்ககோலா நிறுவனம் தனது கால் லிட்டர் பாட்டிலை 20 ரூபாய்க்கு தரும் நிலையில் 200 மில்லி குளிர்பானத்தை கேம்பா நிறுவனம் 10 ரூபாய்க்கு தருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களுக்கு 6 முதல் 8 விழுக்காடு கூடுதல் மார்ஜின் தருவதால், பெரும்பாலானோர் கேம்பாவை தேர்ந்தெடுக்கின்றனர்.