இனி லஞ்சம் கொடுக்க முடியாது..
அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக பேனா உள்ளிட்ட சில பொருட்களை அளிப்பது வழக்கம். ஆனால் அண்மையில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இன்ப சுற்றுலா, லஞ்சம் என ஆயிரம் கோடி ரூபாயை அளித்ததாக புகார் எழுந்தது . இந்த புகாரை dolo நிறுவனம் மறுத்துள்ளது. இந்த சூழலில் மருத்துவர்களுக்கு இலவசங்கள் அளிப்பதை மத்திய அரசு கண்காணிக்க உள்ளது.
மேலும் இது தொடர்பாக உள்ள விதிகளை கடுமையாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மருத்துவர்கள் பின்பற்றும் நடைமுறை விதிகள், பெயர் அளவில் இருப்பதாகவும், மாநில மருத்துவ கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்ள விதிகளில் விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்து நிறுவனங்கள் தங்கள் நியாபகமாக பேனாக்கள் தருவது தொடரும் என்றும் தெரிகிறது.