சலுகை கேட்கும் மருந்து நிறுவனங்கள்..
இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் சலுகைகளை கோரியுள்ளன. மொத்த விலை பணவீக்கமான wpi குறைந்துள்ள நிலையில், தங்களுக்கு உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாட்டில் சலுகைகள் தேவை என்று மருந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு மொத்த விலை பணவீக்க குறியீட்டின் அடிப்படையில்தான் மருந்துகளின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் தற்போது wpi குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரம் 10 விழுக்காடு விலையை உயர்த்தும் முடிவுக்கும் மருந்து நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. மருந்து நிறுவனங்கள் கேட்கும் சலுகைகள் குறைவான அளவில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் விலை காரணமாக ஒரு முறை சலுகை தேவைப்படுவதாக நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன. வலி நிவாரணிகள், தொற்று பரவல் மருந்துகள் கடந்தாண்டு 12 விழுக்காடு வரை விலை உயர்த்தப்பட்டன. 12.12 விழுக்காடு அளவுக்கு கடந்தாண்டு ஏப்ரல் 1 முதல் விலை உயர்த்த தேசிய மருந்துப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் கீழ் 800 மருந்துள் கொண்டுவரப்பட்டன.
மருந்துகள் உற்பத்தி நிறுவனங்கள் கேட்கும் சலுகைகளை அளித்தால் பொதுமக்களுக்கு சில பைசாக்கள் மட்டுமே ஒவ்வொரு மருந்தின்மீது மிச்சமாகும் என்பதால் மருந்து நிறுவனங்கள் கேட்கும் சலுகையால் பெரிய நல்ல சாதகமான நிலை ஏற்படாது என்கின்றனர் மற்றொரு தரப்பு நிபுணர்கள். இதனிடையே புதிய சலுகைகள் கோரினாலும், புதிய விலைகளை அச்சிடுவதற்கு கூடுதல் செலவாகும் என்பதும் மற்றொருதரப்பின் விளக்கமாக உள்ளது