தங்க நகைக்கடன் வழங்கும் பிரபல நிறுவனம்..

இந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக திகழும் பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், அடுத்ததாக தங்க நகை அடகு பெறும் வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார தேவைகளுக்கு விரைவாக தங்க நகைக்கடன் வழங்க அந்த நிறுவனம் இறுதி முடிவெடுத்துள்ளது. விவசாய தேவைக்கான நகைக்கடனையும் இந்நிறுவனம் வழங்க இருக்கிறது. மேலும் தொழில் விரிவாக்கத்துக்காக நகைகளை பெற்றுக்கொண்டு பணத்தையும் இந்த நிறுவனம் வழங்க உள்ளது. தங்க நகைக்கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அது தற்போதைய வடிவில் வெளியிடப்பட்டால், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். இந்த நிலையில் தங்கநகைக்கடன் வழங்கும் முடிவை அந்நிறுவனம் வெளியிட்டதை அடுத்து அதன் பங்குகள் 4.4%உயர்ந்து ஒரு பங்கு ரூ.382.40 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக 30 நிமிடங்களில் தங்க நகைக்கடன் வழங்க வேண்டும் என்றும், குறைந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு திருப்பி செலுத்தும் முறைகளையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பூனாவாலா நிறுவனம், விரைவில் 400 கிளைகளை தொடங்க இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை குறிவைத்து இந்த புதிய கடன் வசதியை பூனாவாலா நிறுவனம் திறக்க இறுக்கிறது.