பொதுத்துறை வங்கிகளின் டிவிடன்ட் ஜோர்..

பொதுத்துறை வங்கிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள டிவிடன்ட் தொகை 2018 நிதியாண்டை ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 27,830 கோடி ரூபாய் டிவிடன்ட் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வெறும் 20,964 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே டிவிடன்ட்களை வழங்கியிருந்தன. இந்த நிலையில் தற்போது இது 33 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கிறது மத்திய அரசின் தரவுகள். 27,830 கோடியில், 65 விழுக்காடு வரை அதாவது 18,013 கோடி ரூபாய் பணம் பங்குச்சந்தை பணம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.2022-23 நிதியாண்டில் மட்டும் 13,804 கோடி ரூபாய் பணம் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. 12 பொதுத்துறை வங்கிகள், மொத்தமாக 1.41லட்சம் கோடி ரூபாய் வரை கடந்த 2023-24 நிதியாண்டில் நிகர லாபத்தை பெற்றன. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் வெறும் 1.05லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 24 நிதியாண்டில் கிடைத்த மொத்த லாபமான 1.41லட்சம் கோடியில், பாரத ஸ்டேட்வங்கியின் பங்கு மட்டுமே 40 விழுக்காடாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் மட்டும் 61,077 கோடி என்றும், இது முந்தைய நிதியாண்டை விட 22 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை அடிப்படையாக கொண்டு இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் 228%அதிகரித்து 8,245 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 62%உயர்ந்து 13,649 கோடி ரூபாயாகவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் லாபம் 61%உயர்ந்து 2,549 கோடி ரூபாயாகவும் உள்ளது. பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 6,318 கோடி ரூபாயாகவும், மகாராஷ்டிரா வங்கியின் லாபம் 4,055 கோடி ரூபாயாகவும், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் வங்கியின் லாபம் 53%உயர்ந்து 8,063 கோடி ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. பிஎஸ்பி வங்கி மட்டும் 85,390 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.