பேடிஎம் நிறுவன பிரச்னை குறித்து பேசிய ரகுராம் ராஜன்…
ஒரு காலத்தில் புதுமைக்காக புகழப்பட்ட பேடிஎம் நிறுவனம் தற்போது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளால் தடுமாறி வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் போன்ற நிதி சார்ந்த நிறுவனங்கள் மேலாண்மை அமைப்புகளுடன் அசவுகர்யம் ஏற்படுவது இயல்புதான் என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டே வங்கித்துறையில், ரிசர்வ் வங்கி, தொழில்நுட்ப புதுமைகளை புகுத்துவது குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், உரிமம் வழங்கப்பட்டபோதே சில அம்சங்கள் குறித்து அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி சார்பாக விண்ணப்பம் செய்யப்பட்டதாகவும் 51 விழுக்காடு பங்கு அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் இருந்ததாகவும், 59 விழுக்காடு ஓசிஎல் நிறுவனத்திடம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வோடஃபோன், ஆதித்யா பிர்லா மணி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தும் அவர்களுக்கு வங்கி தொடங்குவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை. அப்போதே பேடிஎம் நிறுவனம் புதிதாக யோசித்ததாக கூறிய ரகுராம் ராஜன், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றால் அதனை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர். ரகுராம்ராஜனின் பேட்டியை குறிப்பிட்டு பேடிஎம் நிறுவனம் நன்றி பதிவிட்டுள்ளது. வங்கி விதிகளை பேடிஎம் மீறிவிட்டதாக கடந்த 7 ஆண்டுகளாக புகார்கள் உள்ளன.
ஏற்கனவே ஒரே பான் எண்ணுடன் நூற்றுக்கணக்கான கணக்குகள் என்ற குற்றச்சாட்டு பேடிஎம் நிறுவனம் மீது இருந்தது.
2021-ல் ஆரம்ப பங்கு வெளியிட்ட இந்நிறுவனம் 2150 ரூபாயில் இருந்து பிப்ரவரி 5 ஆம் தேதி நிலவரப்படி 72 விழுக்காடு சரிந்திருக்கிறது. பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்தபோதிலும், நாங்கள் நேர்மையானவர்கள் என்றே பேடிஎம் நிறுவனத்தினர் விளக்கமளித்து வந்தனர். வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிதான் பாதிக்கப்படுமே தவிர்த்து, பேடிஎம் நிறுவன கணக்குகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேங்கில் இருந்து எளிதாக மாறும் மாற்று வழிகளை வாடிக்கையாளர்கள் நகர்ந்து வருகின்றனர்.வரும் 29 ஆம் தேதி வரை பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக பணம் போடவோ, எடுக்கவோ எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதே நேரம் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி வரும் 29ஆம் தேதிக்கு பிறகு புதிய டெபாசிட்கள் எதையும் செய்ய இயலாது. அதே நேரம் யூபிஐ சார்ந்த பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பே டிஎம் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.