22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பணமழை !!!! பணமழை மட்டுமே!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கால்பந்து உலகக்கோப்பை அமைப்புக்கு ஏழுபுள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் லாபமாக கிடைத்திருக்கிறது. மிகச்சிறிய உள்ளூர் நிறுவனம் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு கோடிகளில் பணத்தை அள்ளித்தந்துள்ளனர். இந்த நிலையில் கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் 200 பேர் சந்தித்து வரவு செலவு கணக்குகளை பார்த்து வருகின்றனர். அதில் வழக்கத்தைவிடவும் அதிக தொகை கிடைத்தால் அதனை கால்பந்தாட்ட மேம்பாட்டுக்ககாக செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. சிறு குறு அமெரிக்க நிறுவனங்களுகம் இந்த அளவிலான ஸ்பான்சர்களை அளிக்க தீவிரம் காட்டி வருகின்றனர் மைதானம், சுற்றுலாவைத் தாண்டி,கால்பந்து போட்டிகளை ஒலிபரப்பும் உரிமத்திலும் கோடிகளில் பணம் கொட்டுகிறது. ஐரோப்பாவுக்கு ஒரு விலை, கத்தாருக்கு ஒரு விலை என இருவேறு வகைகளாக பணம் கொட்டியது. வழக்கத்துக்கு மாறாக கிடைத்த பணத்தை ரிசர்வாக பிஃபா வைத்துள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஃபிபாவின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டுக்கான உலக்கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *