எங்கும் ஓடிவிட மாட்டேன் -ராஜிவ் பஜாஜ்..
பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ராஜிவ் பஜாஜ் தாம் ஓய்வுபெறப்போவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தாம் ஓய்வு பெறப்போவதில்லை என்றும், எங்கும் எப்போதும் ஓடிவிடமாட்டேன் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். போதுமான அளவுக்கு தனது நிறுவனத்தில் பணியாற்றிவிட்டதாக பஜாஜ் நிறுவனத்தின் 17 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் ராஜிவ் பஜாஜ் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நிறுவனத்துக்கு புதிய, இளமையான நிர்வாக இயக்குநர் தேவை என்றும் பேசியிருந்தார். 34 ஆண்டுகளாக பஜாஜ் நிறுவனத்துக்காக பணியாற்றிவிட்டதாக பங்குதாரர்களிடம் பஜாஜ் பேசினார். 35 வயதில் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்றதாகவும் தற்போது அவருக்கு 57 வயதாவதாகவும் கூறியுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராஜிவ் , பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்றார். கடந்த 2007-ல் நிறுவனம் மூன்றாக உடைக்கப்பட்டது. பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஹோல்டிங்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களில் ஆட்டோ மொபைல் வணிகத்தை மட்டும் ராஜிவ் செய்கிறார். நிதித்துறையை இவரின் சகோதரர் சஞ்சீவ் கவனிக்கிறார். கடந்த 2022-ல் பஜாஜ் குழுமத்தின் தலைவராக இருந்த ராகுல்பஜாஜ் காலமானார். கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து ராஜிவ் பஜாஜ் அந்நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ராஜிவ் பஜாஜ் 1988-ல் பட்டம் பெற்றார். பின்னர் வார்விக்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் உற்பத்தி சிஸ்டம் இன்ஜினியரிங் அவர் பயின்றுள்ளார்.