கட்டுப்பாடுகளை நீக்கிய ரிசர்வ் வங்கி
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மீதான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை நீக்கியது
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரிசர்வ் வங்கி கடந்த 23 ஏப்ரல் 2021 அன்று, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் மே மாதத்திலிருந்து புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. கட்டண முறையின் தரவைச் சேமிப்பதில் 2018 சுற்றறிக்கைக்கு இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி மேற்கோள் காட்டியது.
அதன்படி இந்தியாவில் இருந்து அனைத்து கட்டணத் தரவையும் சேமிக்க ’கார்டு நெட்வொர்க்’குகளை ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியது. இந்தியாவிற்கு வெளியே பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றாலும், செயலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் மட்டுமே தரவுகள் சேமிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஜூன் 2019 இல் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.