கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனை திரும்பி செலுத்தவில்லை என்பதால் டிராக்டரை கடன் வசூலிக்கும் முகவர் எடுத்துச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் கர்ப்பிணி மனைவி டிராக்டர் ஏற்றிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கடன் வழங்கிய மகேந்திரா நிறுவனம் மூன்றாம் நபர்களை வைத்து கடன் வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தசூழலில் கொடுத்த கடன்களை வசூலிக்க முகவர்கள் வரம்பு மீறிய கடினமான முயற்சிகளை செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்துக்கு பிறகு கடனை திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பணத்தை திரும்ப வசூலிக்க செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடன் பெற்றவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்தக்கூடாது.கடன்பெற்றவரின் குடும்பத்தினர் குறித்தும் பேசக்கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள், மிரட்டும் வகையில் எந்த அச்சுறுத்தல்களையும் நிதி நிறுவனங்கள் செய்யக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
வங்கிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய ரிசர்வ் வங்கி கட்டமைப்பு ஒன்றை அமைத்து வருகிறது.