தங்கப்பத்திரம் அப்டேட் இதோ..

தங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில் தங்கப்பத்திரத்தை அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பணம் கட்டி அது முதிர்ச்சி அடைவதற்குள் முன்கூட்டியே வெளியேறவும் ரிசர்வ் வங்கி காலகட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தங்க பத்திரத்தில் இருந்து வெளியேறினாலும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் போக மீதம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கி அதற்கு வட்டியும் கிடைக்கும் வகையில் தங்க பத்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 8 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் பணம் போடலாம் என்ற நிலையில் 5 ஆண்டுகள் முடிந்துள்ளதால் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முயற்சிப்பவர்கள் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பணமாக மாற்ற முயற்சி செய்ய சரியான தருணமாகும். கடந்த 2027-18 காலகட்டத்தில் முதலீடு செய்திருந்தால் வரும் 16 ஏப்ரல் முதல் பணத்தை எடுக்க முடியும் இதற்காக வரும் மார்ச் 17 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 34 வகையான தேதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட தங்கப்பத்திரம், வழக்கமான தங்கத்துக்கு மாற்றாக முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேரலாம். வங்கிகள், அஞ்சலகம், பங்குச்சந்தைகள்,இணைய வழியாகவும் இந்த தங்கத்தை வாங்க முடியும். ஒரு நபர் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இயலும்…