“எல்லா சேமிப்புகளும் ஒப்பந்தத்தில் வராது”
நிதி ஒப்பந்தத்துக்கு ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ் என்று பெயர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், டெரிவேட்டிவ்ஸ் குறித்து செபியுடன் ஆலோசித்து இருப்பதாக தெரிவித்தார். தங்கள் கருத்துகளை தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் டெரிவேட்டிவ்ஸ் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி கூறியுள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில் மக்கள் மார்ஜினைத்தான் பார்பதாகவும், இது பற்றி செபியிடம் கலந்து ஆலோசிப்பதாகவும், ஃபியூச்சர் அன்ட் ஆப்சன்ஸ் குறித்து செபி தனியாக ஒரு பகுப்பாய்வு தர இருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். கடந்த ஜூன் மாதத்திலும் ரிசர்வ் வங்கி இந்த விவகாரம் குறித்து கலந்து ஆலோசித்தது. F & O சந்தையில், பெரும்பாலானவர்கள் முதலீடு செய்வதாகவும், அதில் அதிகம் பேர் நஷ்டத்தை மட்டுமே சந்திப்பதாகவும், இது குறித்து செபியும், ரிசர்வ் வங்கியும் கண்காணித்து வருவதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். கடந்த 30 ஆம் தேதி இது தொடர்பாக 7 புதிய ஒப்பந்தங்களை ஆலோசித்து உள்ளதாகவும், குறைந்தபட்ச F&O ஒப்பந்தம் 20லட்சம் ரூபாயாக உயர்த்தவும், வாரந்திர ஒப்பந்தங்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறினார். இளைஞர்கள் அதிகளவில் அதாவது 92.5லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு 51,689 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளனர். F&O வர்த்தகத்தில் பெரிய இழப்பு இருப்பதை பொருளாதார ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.