வட்டி குறைக்க பிரகாச வாய்ப்பு..
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 விழுக்காடாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 3 நாட்களாக நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை சக்திகாந்ததாஸ் நேற்று அறிவித்தார். அதில் வட்டி குறைப்புக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த நிதி கொள்கைக் குழு கூட்டம் வரும் டிசம்பரில் நடக்க உள்ளது. அப்போது 50 புள்ளிகள் வரை ரெபோ வட்டி விகிதம் குறையலாம் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ்வங்கியின் ரெபோ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பதால் 600 புள்ளிகளுக்கும் மேலும்சென்செக்ஸும். 1 விழுக்காடு அளவுக்கு நிஃப்டியும் உயர்ந்தன. சோழமண்டலம், ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்கா்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் 2 முதல் 3 விழுக்காடு வரை லாபம் ஈட்டின. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ன்க இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். அடுத்த நிதி கொள்கை குழு கூட்டத்துக்குள்ளாக அமெரிக்க அதிபர் தேர்தலும் முடிந்துவிடும். மத்திய கிழக்கு நாடுகளில் சண்டையும் தொடர்கிறது.