ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்…
வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றும் பணியை பாரின் எக்ஸ்சேஞ்ஜ் தளங்கள் செய்து வருகின்றன. முழுவதும் மின்னணு மயமான நிலையில் வகைதொகையில்லாமல் நிறுவனங்கள் புதிது புதிதாக இந்த பரிவர்த்தனைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தங்களிடம் பதிவு செய்யாத மோசடி ஏற்படுத்தும் வகையில் உள்ள 34 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. Etp எனப்படும் இவ்வகை பரிவர்த்தனை தளங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் ரசிர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Fema எனப்படும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை நிர்வாகச் சட்டத்துக்கு உட்படாமலும் உரிமம் இல்லாமலும் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளதுடன், அனுமதி இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணியை செய்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.,
பதிவில்லாமல் இயங்கி வரும் ETPகளின் பட்டியலை ரிசர்வ்வங்கி இணையதளத்தில் பார்க்க முடியும் என்றும் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது