ரிசர்வ் வங்கி அறிவித்த இதெல்லாம் புதுசு..
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அந்த வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். அதில் ஒரு பகுதியாக ரெபோ வட்டி விகிதத்தில் 10 ஆவது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. சில்லறை பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு தங்களை கேட்டுக்கொண்டதாக கூறிய சக்திகாந்ததாஸ், இந்தியாவின் வளர்ச்சியை 7.2%ஆகவே வைத்திருக்கவும், சில்லறை பொருள் விலைவாசி குறியீடாக 4.5 விழுக்காடு வைத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார். யுபிஐ 123யில் பண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், யுபிஐ லைட் வாலட்டில் வரம்பு 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் உணவுப்பொருட்கள் சார்ந்த விலை திடீரென உயர்ந்துள்லதாக வும் சக்தி காந்ததாஸ்கூறினார். இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் வலுவாக இருப்பதாகவும், வெளிநாட்டு பண கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். வளர்ச்சி, பணவீக்கம் இரண்டையும் சமமாக எடைபோட்டுள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.