புதிய வட்டியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி.

SORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும் இந்த முடிவை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான பண பரிவர்த்தனைகள் , ரெபோ மற்றும் டிரை பார்டி ரெபோ வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய வட்டி விதிக்கப்படுகிறது. ஓவர்நைட் மனி மார்க்கெட்டின் 98 % அளவை இந்த புதிய வட்டி உள்ளடக்கியது. புதிய வட்டி குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மைக்கேல் டெபாபிராதா பர்தா, புதிய குறியீடு என்பது அனைத்து பாதுகாப்பான பரிவர்த்தனைகளையும் பெற்றுக்கொள்ளும் என்றார். மும்பை இன்டர்பேங் அவுட்ரைட் ரேட் எனப்படும் MIBOR அமைப்பின் பரிந்துரையை அடுத்தே புதிய வட்டி வசூலிப்பு முறை அமலாகிறது. ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் ராமநாதன் சுப்பிரமணியன் தலைமையில் இந்த குழு இயங்கி வருகிறது. பாதுகாப்பான சொத்துகளின் பரிவர்த்தனைகளும் , குறைவான சந்தேகம் உள்ள பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MIBOR அமைப்பின் வட்டி விதிக்கும் முறையை SORR வட்டி வசூலிக்கும் முறை மாற்றியமைக்கிறது.