பங்குச்சந்தைகள் உயர காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28 ஆம் தேதி கணிசமான உயர்வு காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய ஈக்விட்டி பங்குகளை வாங்கியதும், உலகளாவிய காரணிகள் சாதகமாக இருப்பதாலும்,சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டதும் இந்திய சந்தைகளில் உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நிதிச்சூழலை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி அண்மையில் தனது திட்டங்களை மாற்றி அமைத்தது இந்திய சந்தைகள் உயர பிரதான காரணங்களாக கூறப்படுகிறது. நிஃப்டி வங்கி மற்றும் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் பங்குகள் அதிகளவில் உயர்ந்தன. பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பின்சர்வ் ஆகிய பங்குகளும் ஏற்றம் கண்டன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் உயர்வில் முடிந்ததால் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2170 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை செய்தனர். உள்ளூர் முதலீட்டாளர்களும் 1198 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை செய்திருந்தனர். 25 ஆம் நிதியாண்டின் உள்நாட்டு உற்பத்தியை 6.5-ல் இருந்து 6.8 விழுக்காடாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உயர்த்தி கணித்திருப்பதும், உயர்த்தியதும் இந்த உய்ரவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி வலுவான வளர்ச்சியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சில தொழில்நுட்ப காரணங்களையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.