மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள்..
ஆகஸ்ட் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 705 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து367 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது. Eicher Motors, ONGC, Tech Mahindra, Tata Motors, Shriram Financeஉள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. BPCL, HDFC Life, Kotak Mahindra Bank, Divi’s Labs, Sun Pharma ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பத்துறை, ஆற்றல், ரியல் எஸ்டேட்துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊடகத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. Oil India, Sun TV Network, Lupin, Alkem Lab, Glenmark Pharma, Ajanta Pharma, Colgate Palmolive, Aurobindo Pharma, Coromandel International உள்ளிட்ட 250க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. ஆகஸ்ட் 09ஆம் தேதி வெள்ளிகிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 600ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து 400ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,245 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 88 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலை கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 88ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்