பிரபல நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கும் ரிலையன்ஸ்..

ஷெயின் என்ற சீன ஆடை நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. 2020 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இந்த நிறுவனம் இந்திய விதிகளுக்கு உட்பட்டு இயங்கலாம் என்று அண்மையில் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். வாடிக்கையாளர்கள் தரவுகள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே வைக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இதில் முக்கியமானவை, ரோட்கெட் பிசினஸ் என்ற நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ஷெயின் என்ற ஆடை நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்காளராக மட்டும் ஷெயின் இருக்கும் மற்றபடி அதன் தள கட்டுப்பாடு ரிலையன்ஸ் வசம் இருக்கும். தொழில்நுட்ப பார்ட்னராக ஷெயின் இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகளை எடுக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த பிராண்டில் புதிதாக பொருட்களை விற்க முடியும். இந்திய ஆடை உற்பத்திக்கு இந்த ஆப் உதவும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். வியாபரம் தொடரும் என்றும் ஷெயின் ஆப் மட்டுமே தடை செய்யப்படும் என்றும் கூறினார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் நடந்த மோதல் காரணமாக சீனாவைச் சேர்ந்த ஏராளமான செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. ஷெயின் நிறுவனத்தின் பொருட்கள் ஆன்லைன் சந்தைகளான அமேசானில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.