ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு தொடரும் கட்டுப்பாடுகள்…
பாதுகாப்பு குளறுபடி,மோசமான பராமரிப்பு,தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 50 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பறக்கவேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது
அதன்படியே தற்போது விமான சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகரித்து வரும் நிலையில் வரும் அக்டோபர் 29ம் தேதி வரை 50 %பயணிகளுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பணியில் இருந்த 80 விமானிகளை சம்பளம் இல்லாத 3 மாத கட்டாய விடுப்பில் அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. நிதி நெருக்கடியால் தவிக்கும் அந்த நிறுவனம் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமானிகளை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. நிறுவனத்தின் திடீர் முடிவு தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அந்த நிறுவன விமானிகள் தெரிவித்துள்ளனர்.