சில்லறை முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு..

அண்மையில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவில் பெரிதும் பாதிக்கப்பட்டது சில்லறை வணிகர்கள்தான்.வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை விட சில்லறை முதலீட்டாளர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் முக்கியமான 500 பங்குகளில், சில்லறை முதலீட்டாளர்களில் 20 விழுக்காடு அளவினருக்கு 45 %வரை சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு முதலீட்டாளர்களில் 20 விழுக்காட்டினருக்கு 34%வரை சரிவு ஏற்பட்டது. அதேநேரம் உலகளாவிய நிதிகளின் பங்குகள் 29%சரிவை கண்டன. இந்தியாவின் நிஃப்டி 50, சென்செக்ஸ் ஆகிய குறியீடுகள் முறையே 14.3%, 13.6%ஆகிய அளவில் சரிவை கண்டன. நடுத்தரம் மற்றும் சிறிய முதலீட்டு குறியீடுகள்தான் சரிவை கண்டன.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தான் பங்குச்சந்தைகள் மிக உச்சத்தில் இருந்தன. அன்று முதல் தற்போது வரை சில்லறை முதலீட்டாளர்களுக்கு 26.6% சரிவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள், 15.1%, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகள் 15.2% வீழ்ச்சியை கண்டுள்ளன. சந்தை மூலதனத்தில் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஸ்டெர்லிங் அன்ட் வில்சன் ரினிவபிள் எனர்ஜி, அதானி கிரீன் எனர்ஜி, ஹோசானா கன்சியூமர் ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. மேலும் வேர்ல்பூல் இந்தியா, இந்தஸ்இன்ட், டன்லா ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சரிவை கண்டன. ஒரே நேரத்தில் அதிகமானோர் பங்குகளை அச்சத்தில் விற்பனை செய்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடிப்படையில் வலுவாக உள்ள ஒரு பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டாலும், சரிவில் இருந்து அதனை மீட்பது எளிதாகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்., FPI நிகர செல்லர்கள் 1.4 டிர்ல்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இது இந்தாண்டின் மிகவும் மோசமான தொடக்கமாக கருதப்படுகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.