டெக் நிறுவன கெடுபிடிகளால் தவிக்கும் பணியாளர்கள்..
அமேசான், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அமேசான் நிறுவனம் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை தூக்கிவிட்டது. விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் இப்போது வரை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் சென்றால் போதும் என்ற திட்டத்தை வைத்துள்ளது. வீட்டில் இருந்து வேலைபார்ப்பது வசதியாக இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்தாலும் நிறுவனங்கள் அதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்துக்கு வராத பணியாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம், அபராதம் உள்ளிட்ட கெடுபிடிகள் காட்டப்படுகிறது. இது பல பணியாளர்களுக்கு பிடிக்கவே இல்லையாம். வேலையையும் சொந்த வாழ்க்கையையும் சமநிலையில் வைக்கும் அவசியத்தை கொரோனா காலகட்டம் பலருக்கும் உணர்த்தியிருந்த நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்தால் பயண நேரம் மிச்சமாவதாகவும், தேவைப்படும்போது வேலைசெய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி அமெரிக்காவில் 71%பணியாளர்கள் தங்கள் பணிகளை வீட்டில் இருந்து செய்வதால் தங்கள் ஒர்க் -லைஃப் பேலன்ஸ் சிறப்பாக இருப்பதாக கூறினர். இந்தியாவிலும் அலுவலகம் சென்று பணியாற்றினால் வேலையின் தரம் குறைவாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதிகரிக்கும் விலைவாசி, பயண தூரம், அதிக செலவு உள்ளிட்ட காரணிகள் அலுவலகம் செல்வதில் சிக்கல்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் நல்ல நட்புறவை மேம்படுத்துதல், சரியான திட்டமிடல் இருந்தால் போதும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அலுவலகத்தில் சகாக்களுடன் பேசிக்கொள்வது நல்ல பலன்தரும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் அலுவலகத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பதையும் தவிர்த்தால் வீட்டையும் சரியாக நிர்விகிக்க இயலும். சிறு சிறு பிரேக் எடுத்துக்கொள்வதால் புத்துணர்ச்சி பிறக்கும்.