ஸ்மார்ட்போன் விற்பனையில் எதிரொலிக்கும் பணவீக்கம்
பணவீக்கம், அதிக உள்ளீட்டு செலவுகள் மற்றும் உதிரிபாகங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவு விற்பனை குறைந்து வருகிறது.
தொழில்துறை நிர்வாகிகளின் கூற்றுப்படி, பொதுவாக ₹10,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
FMCG மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற நுகர்வோர் பொருட்கள் முந்தைய ஆண்டை விட கடந்த வருடம் விலை உயர்ந்தது,
குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தொடங்கும் பண்டிகைக் கால தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி அதிகரிக்கும் போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் தள்ளுபடியானது முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.