உயர்ந்து வரும் இந்திய ஈக்விட்டி சந்தைகள்..
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அண்மையில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. இந்த நிலையில் இந்திய சந்தைகள் கடந்த 3 மாதங்களாகவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கும் சிறப்பாக வளரும் என்று தெரியவந்துள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் நடந்த ஆய்வில், சென்செக்ஸ் 25%வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 66%வளர்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் உள்ள பங்குச்சந்தை நிலவரத்துக்கு தகுந்தபடி இந்திய சந்தைகள் சிறப்பாக செயல்படுவதாக கூறும் நிபுணர்கள், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த இடமாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களின் வட்டி விகிதத்தை குறைப்பது, குறுகிய கால பலன்களை இந்தியாவுக்கு தரலாம் என்றும், இந்திய ரூபாயின் மதிப்பு தற்காலிகமாக வலுவடையும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்டகால அடிப்படையில் உலகளாவிய பொருளாதார நிலைக்கு தகுந்தபடிதான் இந்திய பங்குச்சந்தைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் 2 ஆயிரமாம் ஆண்டு வரை ஆலன் கிரீன்ஸ்பான் வழிநடத்தி வந்த ஃபெடரல் ரிசர்வ், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. 2001-2010 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் டாட் காம் பிரச்சனை, பெண்டகன் இடிப்பு, 2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையை அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடந்தது குறிப்பிடத்தக்கது.