மந்தநிலை அபாயம் 25%..
வல்லரசு நாடான அமெரிக்காவில் அடுத்தாண்டு பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு 15 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதாக பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. மொத்தமாக பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும், பெரிய நிதி ஏற்ற இறக்கம் என தற்போது ஏதும் பெரிதாக இல்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேவை ஏற்பட்டால் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அமெரிக்காவில் அதிகரித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் கடுமையாக உயர்ந்திருப்பதாக அமெரிக்க அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
25அடிப்படை புள்ளிகளை செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறைக்க அமெரிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் மற்றொரு பிரபல நிறுவனமான ஜே.பி. மார்கன் நிறுவனம் வரும் செப்டம்பரில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அரை விழுக்காடு வரை வட்டிகளை குறைக்கும் என்றும் கணித்துள்ளது. தற்போதைக்கு மந்த நிலை பெரியளவில் நிலவவில்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.