இந்தியாவிலும் ஸ்டீல் விலை உயரும் அபாயம்..
உலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சீனாவிலும் ஸ்டீலின் விலை கடுமையாக உயர்ந்திருக்குறது என்று ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் இந்தியாவிலும் கடைசி காலாண்டில் எதிரொலிக்கும் என்று ஜெயந்த் தெரிவித்துள்ளார். ஜே எஸ்டபிள்யூ நிறுவனம் 3 ஆவது காலாண்டில் மட்டும் 6.87 மில்லியன் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்திருப்பதாகவும், இது இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் அதிகம் என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக 7 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு உலக பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த முறை சரிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வரிகளைவாக மட்டும் குறைந்த தொக செலுத்த நேரிடலாம். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் திட்டம் மூலம் ஸ்டீல் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.. அரசாங்கம் தங்களுக்கு கட்டமைப்புகளை மேம்படுத்தவும் விலைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.