அவங்களுக்கே ரூ.81,000 கோடி இழப்பு..

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக கடந்த 5 மாதங்களாக முதலீட்டாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதில் பல பிரபல பணக்காரர்களும் தப்பவில்லை. கடந்த அக்டோபர் முதல் தேதியில் இருந்து இதுவரை தனிநபர் முதலீடுகளில் பெரிய பணக்காரர்கள் இழந்த தொகை 81 ஆயிரம் கோடி ரூபாயாகும், இதில் குறிப்பாக டி மார்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானிக்கு மட்டும் 64 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 28% சரிவாகும். தமானி முதலீடு செய்த டிரென்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் முதல் இதுவரை 32 விழுக்காடு சரிந்துள்ளது. இதே நேரம் நிஃப்டி 11 விழுக்காடு சரிந்துள்ளது. மிட்கேப் 150வகை பங்குச்சந்தை குறியீட்டு எண் 17 விழுக்காடும்நிஃப்டி சிறு முதலீட்டு நிறுவன குறியீடான நிஃப்டி ஸ்மால்கேப் இன்டிசசஸும் 22 விழுக்காடு வரை சரந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து ஈக்விட்டி முதலீடுகளை 2.5லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்ததால் , சிறிய நிறுவனங்களுக்கு அது பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்குகள் 19 விழுக்காடு குறைந்துள்ளன. ஜுன்ஜூன் வாலா குடும்பத்தினரின் பங்குச்சந்தை மதிப்பு 59,709 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ஆகாஷ் பன்சாலிக்கு 16 விழுக்காடும், ஹேமேந்திர கோத்தாரிக்கு 29% பணமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. முகுல் அகர்வால் , ஆஷிஷ் கச்சோலியா, யூசுப்அலி காதர், ஆகியோர் குறைந்த அளவு இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.