வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய்..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் அமெரிக்க டாலர்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளது. அதிகரித்து வரும் அமெரிக்க டாலர்கள் மதிப்பு காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் வாங்கவும், உள்ளூர் மக்கள் மத்தியிலும் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக சரிந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி ஆசியாவின் சில நாடுகளின் கரன்சிகளும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து உள்ளன. இந்திய ரூபாய் வீழ்ந்திருக்கும் அதே நேரத்தில், சீன யுவானின் மதிப்பு 0.1விழுக்காடு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பை குறிக்கும் டாலர் இன்டெக்ஸ் லேசான உயர்வு பெற்று 106.5 என்ற அளவை எட்டியுள்ளது. அதிகரித்துக்கொண்டே செல்லும் அமெரிக்க டாலர்களின் மதிப்பும், சரிந்துகொண்டே செல்லும் இந்திய ரூபாயின் மதிப்பாலும் இந்திய சந்தைகளில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இறக்குமதி செய்வோருக்கும், பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் டாலர் மதிப்பு உயர்வு, மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.