ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் சர்ச்சையை தீர்க்க கோரிக்கை
ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் மற்றும் கலாநிதி மாறன் இடையே நீடித்து வரும் பங்கு பரிமாற்ற சர்ச்சையை தீர்க்க மத்தியஸ்தம் செய்வதற்கான கூட்டு கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இரு தரப்புக்கும் இடையேயான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க 600 கோடி ரூபாய் வழங்க முன்வந்தது.
இரு தரப்பினரையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், ஸ்பைஸ்ஜெட் வழங்கிய சலுகையை பரிசீலிக்குமாறு மாறனிடம் கூறியது.