தேசிய பங்குச்சந்தை அதிரடி..
இந்திய பங்குச்சந்தையில் ஊக வர்த்தகம் எனப்படும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில், சில்லறை வணிகர்களுக்கு அடிப்படை தகுதியை, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது. சிறு வணிகர்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சியை செபி செய்து வருகிறது. மாற்று முதலீட்டு முறை உள்ளிட்ட தகுதிகளை வகுக்க செபியிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே சில முயற்சிகளை செபி செய்திருக்கும் நிலையில் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் முறையில் இரண்டாவது கட்ட விதிகளை செபி வகுக்க இருக்கிறது.தற்போது வரை ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் என்ற முறையில் அதிக மதிப்புள்ள பணம் வைத்திருப்போர் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதே பாணியில்தான் வருங்காலங்களில் F&O பிரிவிலும் வணிகம் நடக்கும் என்று மூத்த வணிக மேம்பாட்டு அதிகாரியான ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாற்று முதலீட்டு முறையான AIF முறையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் வைத்திருப்போர், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு பணப்புழக்கம் வைத்திருப்போர் மட்டுமே ஊக வர்த்தகமான பியூச்சர்ஸில் பணம் முதலீடு செய்ய திட்டம் வகுக்க்கப்பட்டுள்ளது. ஃபியூச்சர்ஸ் முறையில் நஷ்டத்தைத் தடுக்கும் வகையில், ஏற்கனவே லாட் மதிப்பை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது செபி. பாதுகாப்பு பரிவர்த்தனை வரி எனப்படும் STT வரியை அதிகரித்தும் செபி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. படிப்படியாக அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டத்தை முழுமையாக அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் முறையில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், செபியின் நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள்