வெளிநாட்டு மியூச்சுவல் ஃபன்ட்களிலும் முதலீடு செய்யலாம்..
இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி திங்கட்கிழமை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் இனி வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யலாம். 25 விழுக்காடுக்கும் அதிகமானஇந்திய பாதுகாப்பு என்ற எல்லையை மீறாத அளவில் இருந்தால் அதில் முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும்திட்டம் குறித்த சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செபி கூறியுள்ளது. ஒரே முதலீடாக இருக்கும் வகையில் இந்த பரஸ்பர நிதி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய பரஸ்பர நிதி மற்றும் வெளிநாட்டு நிதி இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்ற வகையில் இந்த முதலீடுகள் இருக்க வேண்டும் என்றும் செபி கூறியுள்ளது. அதாவது வெளிநாட்டு பரஸ்பர நிதியில் இந்திய பங்களிப்பு 25 விழுக்காடு வரை இருந்தால் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும், 25 விழுக்காடுக்கு அதிகமாக இருந்தால் அந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய முடியாது என்றும் செபி விதியை வகுத்துள்ளது.