செபியின் அட்டகாச முயற்சி..
பங்குச்சந்தையின் தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில் இருந்து புதிய அப்டேட் உங்களுக்காக அளிக்கிறோம். பங்குச்சந்தைகளை கண்காணித்து கடிவாளம் போடும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் செபி தனது புதிய பீட்டா வெர்ஷனை அறிமுகப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். பங்குச்சந்தையில் போட்ட பணம் என்று விற்பனை செய்கிறோமோ அது அடுத்த வேலை நாளில்தான் நமக்கு கைகளில் கிடைக்கும் வகையில் நடைமுறை தற்போது உள்ளது. இனி புதிய பீட்டா வெர்சன் மூலமாக என்றைக்கு பங்குகளை விற்கிறீர்களோ அன்றே பணம் உங்கள் கணக்குகளுக்கு வந்துவிடும். முதல்கட்டமாக இந்த திட்டம்25 பேருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட தரகு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அனைத்து முதலீட்டாளர்களும் இதற்கு தகுதியானவர்கள் என்று செபி கூறுகிறது. காலை 9.15 முதல் பகல் 1.30 மணி வரை இந்த புதிய வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதிய நடைமுறையின்படி பிளஸ் 100 பிரைஸ் பேண்ட் கொண்டிருப்பவர்கள் இதனை செய்ய முடியும், தற்போது வணிகம் நடக்கும் அடுத்த நாளில் பணம் கிடைக்கும் வகையில் டி பிளஸ் 1 என்ற வகையில் இந்த பிரைஸ் பேண்ட் 50 புள்ளிகளாக உள்ளது. முடிவு விலையாக எந்த பணமும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல் எந்த வித ஆப்ளிகேசன்களும் நடைமுறையில் இல்லை. இனி வரும் நாட்களில் செபி தனது டி பிளஸ் 0 என்ற திட்டத்தை விரிவுபடுத்தும் என்றும் கூறப்படுகிறது.