ரிப்போர்ட் செய்ய சொல்லும் செபி..
பங்குச்சந்தைகளில் குறிப்பாக பரஸ்பர நிதியில் 15லட்சம் ரூபாய்க்கும் அதிகமான யூனிட்கள் வைத்திருந்தால் அதனை கம்பலைன்ஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியபங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான செபி கூறியுள்ளது. 15லட்சம் ரூபாயை ஒரே பரிவர்த்தனையாக செய்தாலோ அல்லது பல முறை பரிவர்த்தனை செய்தாலோ அதனை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த விதியை செபி அமல்படுத்த இருக்கிறது. சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் , பங்குகளை வாங்கியது யார், அவரின் பெயர், அறங்காவலர் அல்லது உடனடி உறவினர் ஆகியோரின் விவரங்களை காலாண்டுக்கு ஒரு முறை தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் 31 ஆம் தேதி வரையுள்ள தகவல்களை வரும் 15 ஆம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கவும், காலாண்டின் முடிவில் 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சொத்து நிர்வகிக்கும் பணியாளர்கள் சொத்துகளை விற்றால் அதற்கு உண்டான காரணத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் செபி கூறியுள்ளது. பரஸ்பர நிதிகளை அளிக்கும் சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய செபி இதனை செய்திருக்கிறது.