செபி விதித்த கெடுபிடி..
இந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு, பரஸ்பர நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்திருக்கிறது. அதாவது நேரடி திட்டங்கள் மற்றும் வழக்கமான திட்ட நடைமுறைகளை தனியாக ஆண்டுக்கு இரு முறை வழங்க வேண்டும் என்பதே அந்த அறிவுறுத்தல். இதுவரை எவ்வளவு செலவானது என்று வழக்கமாக அளிக்கப்படும் ஆவணங்கள் மட்டுமின்றி, தனியாகவும் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய செபி ஆணையிட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. செலவு எவ்வளவு ஆகிறது என்பதை தனியாக வழங்குவது கட்டாயம் என்றும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரிஸ்குகளை ஆராய்ந்து கச்சிதமாக தெரிவிக்கும் வகையில், ரிஸ்கோ மீட்டர் அமைப்பை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி குறைந்த ரிஸ்க் உள்ளவை ஐரிஷ் கிரீன் நிறத்திலும், அதிகம் மற்றும் மிக அதிக ரிஸ்க் உள்ள பங்குகள் செந்நிறத்திலும் வகைபடுத்தப்பட்டுள்ளது. ரிஸ்கோ மீட்டர் என்பது வாகனத்தில் இருக்கும் ஸ்பீடோ மீட்டர் போலவே அபாயங்களை பரஸ்பர நிதி கணக்கு வைத்திருப்போருக்கு தெரிவிக்கிறது.