22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

7 ஆவது நாளாக சரிந்த சந்தைகள்..

இந்தியப் பங்குச்சந்தைகளில் 7 ஆவது நாளாக திங்கட்கிழமை சரிவு தொடர்ந்தது
கடந்த வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி விடுமுறையால் பங்குச்சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளில் வர்த்தகம் தொடங்கி நடந்தது.தொடங்கியது முதலே சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் கடைசி வரை மீளவில்லை.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 241 புள்ளிகள் சரிந்து 77,319 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் குறைந்து 23,453 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Tata Consultancy Services, Infosys, NTPC, HCL Technologies உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிதாக சரிந்தன. Tata Steel, Hindustan Unilever, Mahindra & Mahindra, Nestle உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி,கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை குறைப்பு தாமதமாகலாம் என்ற தகவலால் ஐடி நிறுவன பங்குகள் பெரியளவில் சரிவை கண்டன. நவம்பர் 18 ஆம் தேதியான திங்கட்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை 480 ரூபாய் உயர்ந்து 55,960 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 6,995 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 99 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், ஜிஎஸ்டி நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *