பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு…
இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் கடும் வீழ்ச்சியை கண்டன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைப்பதாக அறிவித்ததுடன் அடுத்தாண்டு இரண்டுமுறை மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்தனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 964 புள்ளிகள் வீழ்ந்து 79,218 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 247 புள்ளிகள் சரிந்து 23,951 புள்ளிகளிலும் வணிகம் நிறைவுற்றது. Dr Reddy’s Labsநிறுவன பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிந்தன. தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி சேவைகள் உள்ளிட்டத்துறை பங்குகள் 1 %வரை சரிவை கண்டன. வியாழக் கிழமை ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 7070 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் குறைந்து 99 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 99 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.