22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

3 ஆவது நாளாக தொடர்ந்த சரிவு..

அக்டோபர் 17ஆம் தேதியான வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494 புள்ளிகள் சரிந்து 81,006 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 221 புள்ளிகள் சரிந்து 24, 749 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டாலும், இந்திய சந்தைகளில் சரிவு தொடர்ந்தது. Tech Mahindra, Infosys, L&T, Power Grid Corp,SBI ஆகிய நிறுவனங்கள் விலை உயர்ந்து முடிந்தன. Bajaj Auto, Shriram Finance, Hero MotoCorp, Nestle,M&M ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே ஒரு விழுக்காடு விலை உயர்ந்தன. மற்ற துறைகளான ஆட்டோமொபைல், ஊடகத்துறை பங்குகள் 2 முதல் 3 விழுக்காடு சரிவை சந்தித்தன. ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சமாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து160 ரூபாயாகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 103 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *