5% வீழ்ச்சியை சந்தித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்
இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது
சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சொகுசு கார்களுக்கு செய்யப்படும் பிரத்யேக சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று உரிய நேரத்தில் சிப் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை 90 ஆயிரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 75 ஆயிரத்து 307ஆக சரிந்துள்ளது
இதன் காரணமாக பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை 4.6%வீழ்ச்சியை கண்டுள்ளது
அண்மையில் ஜெ.எல்.ஆர் பிரிவின் பணப்புழக்கமும் கணிசமாக குறைந்தது.அதாவது 1.11 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை கூட இந்த நிறுவனம் எட்டவில்லை
இதன் காரணமாக பங்குச்சந்தையில் டாடா மோட்டாரின் ஜெஎல்ஆர் நிறுவன பங்குகளில் ஒரு பங்கின் விலை 6.20 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது
சர்வதேச அளவில் நிலவும் மந்தநிலை காரணமாக வரும் ஆண்டில், டாடா மோட்டார்ஸின் ஜெஎல்ஆர் மிகவும் சவாலான சூழல்களை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.